ரூ. 1.49 லட்சத்தில் 155சிசி பைக் அறிமுகம் செய்த யமஹா

யமஹா புதிய FZ-Rave உடன் XSR155-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.1,49,990 எக்ஸ்-ஷோரூம் விலையில் வரும் இந்த நியோ-ரெட்ரோ பைக் MT-15 அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதாகும். வட்ட எல்இடி ஹெட்லேம்ப், டியர்-டிராப் டேங்க், எல்சிடி கன்சோல் வழங்கப்பட்டுள்ளது. 155cc லிக்விட்-கூல்ட் என்ஜின் 18.1bhp, 14.2Nm டார்க் அளிக்கிறது; 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச், டூயல்-சேனல் ABS, TCS உடன் வருகிறது. நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி