பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடைக்காரர் கைது

நெல்லை பேட்டையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஜெராக்ஸ் கடைக்குச் சென்றபோது, கடையின் உரிமையாளர் முகமது அஸ்ரப் அலி மறைமுகமாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதைப் பார்த்த பெண் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அஸ்ரப் அலியின் செல்போனை ஆய்வு செய்ததில், 200க்கும் மேற்பட்ட பெண்களை வீடியோ எடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முகமது அஸ்ரப் அலியை இன்று (ஜூன் 02) போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி