WTC Final: கறுப்பு பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள்

AUS Vs SA மோதிவரும் WTC ஃபைனல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3-வது நாளான இன்று 2-வது இன்னிங்ஸை தொடங்கி ஆஸி., பேட்டிங் செய்து வருகிறது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக, அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மைதானத்தில் இருநாட்டு வீரர்களும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். அதோடு, துக்கம் அனுசரிக்கும் விதமாக கறுப்பு நிற கைப்பட்டையும் அணிந்து அவர்கள் விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி