ஆசிய விளையாட்டு தேர்வில் வினேஷ் போகத்துக்கு அனுமதி

வினேஷ் போகத், ஆசிய விளையாட்டு மல்யுத்த அணித் தேர்வில் பங்கேற்க அனுமதி கோரி தொடர்ந்த வழக்கில் முக்கிய வெற்றி பெற்றுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, வரும் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் நடைபெறும் தகுதி போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்கலாம் என்று உத்தரவிட்டது. முன்னதாக, தேசிய போட்டிகளில் பங்கேற்காத காரணங்களால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 2028 ஒலிம்பிக்கைக் குறிவைத்து மீண்டும் களமிறங்கும் வினேஷுக்கு இந்த தீர்ப்பு பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி