குஜராத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டெல்லி கேபிடல்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை (பிப்.5)நடைபெறும் இறுதிப் போட்டியில் RCB-ஐ எதிர்கொள்ள உள்ளது. 2023, 2024, 2025ஆம் ஆண்டுகளை தொடர்ந்து 4ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு டெல்லி அணி முன்னேறியுள்ளது. ஆனால். இதுவரை கோப்பையை வென்றது இல்லை.