உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌர் சிட்டி மாலில் உள்ள கேஎஃப்சி (KFC) உணவகம் ஒன்றில், சனிக்கிழமையன்று பொரித்த கோழி இறைச்சியில் புழுக்கள் காணப்பட்டன. இச்சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. அவர்கள் கேஎஃப்சி ஊழியர்களிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பி விளக்கம் கோரினர். இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.