உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின் போது ஹர்ஷித் ராணாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட உள்ளதால், அவர் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அவருக்குப் பதிலாக முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராணா ஆல்ரவுண்டர் என்பதால் அவரது விலகல், இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுவதாக ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.