உலகக்கோப்பை கால்பந்து அட்டவணை வெளியானது

2026ஆம் ஆண்டுக்கான 23வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகள் நடத்துகின்றன. போட்டிகளுக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, வரும் ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூலை 19ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக 48 அணிகள் 104 போட்டிகளில் பங்கேற்கின்றன. முதல் போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்சிகோவில் உள்ள அஸ்டெகா ஸ்டேடியத்தில் மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. 

நன்றி: FIFA TV

தொடர்புடைய செய்தி