உலகக் கோப்பை செஸ்: குகேஷ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில், இந்தியாவின் டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி, தீப்தாயன் கோஷ், பி.ஹரிகிருஷ்ணா, கார்த்திக் ஆகியோர் நேற்று 3வது சுற்றுக்கு முன்னேறினர். குகேஷ் கஜகஸ்தானின் நோகர்பெக்கையும், அர்ஜுன் பல்கேரியாவின் பெட்ரோவையும், தீப்தாயன் ரஷ்யாவின் நெபோம்னியச்சியையும், கார்த்திக் சக இந்தியரான அரவிந்த் சிதம்பரத்தையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். பிரக்ஞானந்தா உள்ளிட்டோர் டை பிரேக்கரில் இன்று மோதுகின்றனர்.

தொடர்புடைய செய்தி