ராமு கண்ணன் இயக்கத்தில், அபிநயா ஆனந்த் நடிப்பில் 30 நிமிட குறும்படமாக உருவாகியுள்ள ‘ஹோப்’ படத்தின் முதல் பார்வை மற்றும் டிரெய்லரை வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் வெளியிட்டுள்ளனர். தேசிய விருது கலைஞர்கள் பலரின் கூட்டணியில் உருவான இப்படம், திரைப்பட விழாக்களில் பாராட்டைப் பெற்றுள்ளதுடன், கமலா திரையரங்கிலும் திரையிடப்படுகிறது. தற்போது இப்படம் முழு நீள ஆந்தாலஜி திரைப்படமாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.