தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை - டிடிவி தினகரன் கண்டனம்

கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் (VB-G-RAM-G) கீழ் தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 10 வாரங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற புகார் பரவலாக எழுந்துள்ளது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், அரிசி,சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், தொழிலாளர்களின் ஊதியத்தைக்கூட உரிய நேரத்தில் வழங்காமல் காலதாமதம் செய்வதா? என கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕