நெல்லை மாவட்டம் வள்ளயூர் அருகே தெருநாய் கடித்ததில் ரேபிஸ் தொற்று பரவி, 2 குழந்தைகளின் தந்தை உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன் ஐயப்பன் (30) என்பவரை தெருநாய் கடித்துள்ளது. காயத்தை சரியாக கவனிக்காமல் விட்டதால் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (நவ., 12) அவர் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.