நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அங்கு நடைபெற்ற பேட்ச் ஒர்க் படப்பிடிப்பின் போது, ஆர்ட் டைரக்சன் பிரிவில் மின் தொழிலாளியாக பணியாற்றிய சேலத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் படக்குழுவினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.