நடிகர் சங்க தேர்தல் நடத்தக்கோரி நம்பிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று (ஜூன் 04) அதன் விசாரணையில் நடிகர் சங்க தலைவர் விஷால், "தேர்தல் நடத்தினால் சங்க கட்டட கட்டுமான பணிகள் பாதிக்கும். அது பாதிக்கக் கூடாது என்பதால் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த விதிமீறலும் இல்லை" என்றார். இதையடுத்து, இவ்வழக்கை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.