ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது X தளத்தில், "அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை அடைந்தேன். பேரிடர் மீட்புப் படையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைவாக விரைந்துள்ளனர். நிலைமையை மதிப்பிடுவதற்காக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி மற்றும் அகமதாபாத் காவல் ஆணையர் ஆகியோருடன் பேசினேன்" என பதிவிட்டுள்ளார்.