பீகார் மாநிலம் மோடிஹரி நகரில், பிரதமர் மோடி இன்று (ஜூலை 18) ரூ.7,200 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "பிகார் மாநிலத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் லட்சாதிபதியாக உள்ளனர். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை இந்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணம். கடந்த ஆட்சியை விட தற்போது இந்த மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது" என்று கூறினார்.