சென்னையில் கடந்த மாதத்தில் இயக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மகளிர் விடியல் பயணப் பேருந்துகள் உள்பட மொத்தம் 162 பேருந்து சேவைகள் திடீரெனக் குறைக்கப்பட்டுள்ளதால் பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல வழித்தடங்களில் இந்த இலவசப் பேருந்துகள் சரிவர இயக்கப்படுவதில்லை எனவும், இதனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் மகளிர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சேவை குறைப்புப் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.