‘மகளிர் உரிமைத்தொகை'.. துணை முதல்வருக்கு அதிமுக கண்டனம்

“அதிமுக மற்றும் பாஜக 'மகளிர் உரிமைத்தொகை' திட்டத்தை நிறுத்த முயற்சிப்பதாகக் கூறுவது முற்றிலும் பொய்யான மற்றும் ஆதாரமற்றது” என அதிமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும், அரசியல் ஆதாயம் தேடவும் துணை முதல்வர் இத்தகைய பொய் செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்புகிறார். அதிமுக எப்போதும் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆதரவாகவே இருக்கும் என்பதைத் துணை முதல்வர் உணர்ந்து பேச வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி