மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 விரைவில் உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் முன்பே தெரிவித்திருந்தார். பொங்கலுக்குள் மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் ஐ.பெரியசாமியும் கூறிய நிலையில், விடுமுறை முடிந்தும் அறிவிப்பு வராததால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று (ஜன.17) அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கிவைக்கும் முதல்வர், மகளிர் உரிமைத் தொகை உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.