தவெக தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.2,500 வழங்கும் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. முதலமைச்சர் விஜய் கால அவகாசம் தேவை என்றும் கேட்டிருந்தார். முன்னதாக திமுக அரசு வழங்கி வந்த ரூ.1,000 இப்போதும் வழங்கப்படுகிறது. இதனிடையே 'மதிப்புமிகு மகளிர் தொகை' புதிய திட்டத்தில் சேர விரும்புவோருக்கு பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாதத்துக்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.