மகளிர் உரிமைத் தொகை: மேல்முறையீடு செய்தவர்களுக்கு வீடு தேடி வரும் அதிகாரிகள்

'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மேல்முறையீடு செய்த 7 லட்சம் பெண்களின் மனுக்கள் தற்போது தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு, ஆதார் மற்றும் மின் நுகர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, அதிகாரிகள் நேரடியாக வீடு வீடாக சென்று பயனாளிகளின் தகுதியை ஆய்வு செய்கின்றனர். இந்த ஆய்வின் மூலம் பல லட்சம் புதிய பயனாளிகள் விரைவில் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, தேர்தலுக்கு முன்னதாகவே மாதம் ரூ.2,000 உரிமைத் தொகை வழங்கப்பட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி