தமிழக அரசு மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இனி, ஓய்வூதியம் கிடைக்கும் குடும்பங்களில் உள்ள பெண்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். ஆனால், ஓய்வூதியம் பெறும் பெண்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. அதேநேரத்தில், ஓய்வூதியம் பெறும் பெண் உள்ள வீட்டில் வேறொரு பெண் இருந்தால், அவர் ரூ.1000 பெற தகுதியானவர்தான். மேலும், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக நவ.15 அறிவிக்கப்பட்டுள்ளது.