அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை.. அமைச்சர் குட் நியூஸ்

அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற நிலை உருவாக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த ஐ.பெரியசாமி, "தமிழகத்தில் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்" என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி