மகளிர் உரிமைத்தொகை. இன்று வங்கி கணக்கில் டெபாசிட்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் மாதந்தோறும் 15 ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் நேற்றே (ஜூன் 14) பணம் வரவு வைக்கப்படும் என மகளிர் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், நேற்று வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து, விடுமுறை நாள்களிலும் வங்கியின் இணைய சேவை இயங்கும் என்பதால், ரூ1,000 இன்று வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி