மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு

தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை திட்டத்தின்கீழ், நடப்பு மாதத்திற்கான ரூ.1,000 நிதியுதவி இன்று (ஜூலை 15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் திட்டம் அரசின் தீவிர பரிசீலனையில் இருந்தாலும், பட்ஜெட்டுக்கு முன்பாக அதனை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என தெரியவந்துள்ளது. இதனால், இந்த மாதமும் வழக்கம்போல பயனாளிகளின் கணக்குகளுக்கு ரூ.1,000 மட்டுமே தடையின்றி வரவு வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி