விரைவில் மகளிர் உரிமைத்தொகை உயர்வு.. அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இப்போது 1.30 கோடி பெண்கள் பயனாளிகளாக உள்ளனர். அவர்களது வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மகளிர் உரிமை தொகை உயர்த்தி வழங்கவுள்ளதாக திமுக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேலூர் மாவட்டம் காட்பாடியில் பேசிய அவர், “ரூ.1000 உயிர்த்தி வழங்குவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி