மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். வேளாங்கண்ணியில் வழிபாடு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் என்றார். மேலும், மகளிர் தொகை வட மாநில பெண்களுக்கும் வழங்கப்படுவதாக வந்த புகாரில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.