கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை உயர்த்தி வழங்கப்பவுள்ளதாக அமைச்சர்கள், துரைமுருகன் மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், உரிமைத் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2000-ஆக உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு இதுகுறித்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.