மகளிர் டிராப் துப்பாக்கிச் சுடுதல்.. இந்தியாவுக்கு தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான டிராப் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நீரு தண்டா படைத்துள்ளார். இறுதிச் சுற்றில் 28 புள்ளிகள் குவித்து புதிய ஆசிய சாதனையுடன் அவர் தங்கம் வென்றார். முன்னதாக அணிப் பிரிவில் வெள்ளி வென்ற இவர், ஒரே தொடரில் இரட்டைப் பதக்கம் குவித்து அசத்தியுள்ளார். டிராப் பிரிவில் இதற்கு முன் 1978-ல் ரந்தீர் சிங் மட்டுமே இந்தியாவுக்குத் தங்கம் வென்று தந்தார்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி

✕
✕