தமிழக அரசின் மகளிர் விடியல் பயணத்திட்டம் என்ற பெயரில் விடியல் நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக கொண்டுவந்த ‘மகளிர் விடியல் பயணம்’ என்ற பெயரில் ‘மகளிர் பயணம்’ என்று மட்டும் பேருந்துகளில் இருந்துள்ளது. இது சர்ச்சையான நிலையில், “இதில் எந்தவிதப் பெயர் மாற்றமும் செய்யப்படவில்லை” என போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்துள்ளது. சம்பந்தப்பட்ட மேலாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நன்றி: NewsTamilTV24x7