“பெண்கள் இருக்கும் வரை திராவிட மாடல் அரசை வீழ்த்த முடியாது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அமைந்தகரையில் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு நடத்திய ‘பேரன்பின் ஈகைப் பெருவிழா புனித ரமலான் நோன்பு திறப்பு’ நிகழ்வில் பேசிய அவர், “மகளிர் நலனை முன்வைத்துதான் ஏராளமான நலத்திட்டங்களை நாம் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது” என்றார்.