சிரியாவில் அஹமது அல் ஷரா தலைமையிலான இடைக்கால அரசு, தற்போது ஆடைக்கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. பொது இடங்களில் பெண்கள் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும், கடற்கரைகள் மற்றும் நீச்சல்குளங்களுக்குச் செல்லும்போது முழு உடலையும் மறைக்கும் நீச்சலுடைகளை அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், ஆடம்பரமான தனியார் கடற்கரை கிளப்புகளுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.