தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு, அவரிடம் இருந்த 4 சவரன் தங்க நகையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த தென் பாகம் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.