ஆந்திரா: மேற்கு கோதாவரி மாவட்டம் யெண்டகண்டி கிராமத்தில் வசித்து வரும் சாகி துளசியின் வீட்டிற்கு வந்த பார்சலில் மின்சாதன பொருட்களுக்கு பதில் மனித உடல் பாகங்கள் இருந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த பார்சலில் ரூ.1.3 கோடி பணம் கேட்டு மிரட்டல் கடிதம் ஒன்றும் இருந்துள்ளது. இதையடுத்து, போலீசார் விசாரணையில் பார்சலில் இருந்த மனித உடல் பாகங்கள் சுமார் 45 வயதுடைய நபருடையது எனவும், 5 நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.