இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் 105.9 டெசிபல் சத்தத்தில் கத்தி, பெண்கள் பிரிவில் உலகின் உரத்த குரலுக்கான கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார். இதேபோல், ஆண்கள் பிரிவில் ஜோசப் மெக்கிரேல் என்பவர் 122.4 டெசிபல் சத்தத்தில் கத்தி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களின் இந்த விசித்திரமான மற்றும் வியக்கத்தக்க சாதனை வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.