கும்பகோணம் அருகே குளிக்கச் சென்ற பெண்ணை முதலை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அணைக்கரை அருகே முல்லங்குடியை சேர்ந்தவர் வசந்தா (60). இவர் இன்று (பிப்., 22) அப்பகுதியில் உள்ள குட்டையில் குளிப்பதற்கு இறங்கியுள்ளார். அப்போது அங்கிருந்த முதலை வசந்தாவின் காலில் கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.