திருவள்ளூர் அருகே பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனை வளாகத்திலேயே பெண்ணை பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு நபர் ஒருவர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 50 சதவீத தீக்காயங்களுடன் படுகாயமடைந்த பெண், மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்ணை தாக்கிவிட்டு தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕