சினிமா பாடலாசிரியர் பா.விஜய், பண மோசடி செய்து விட்டதாக சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் லலிதா என்ற பெண் புகார் அளித்துள்ளார். அதில், “கடந்த ஆண்டு தாம் தயாரிப்பதாக இருந்த படத்தில் பாடல்கள் எழுதுவதற்காக பா.விஜய்க்கு ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடுத்தோம். படம் நின்றுபோனதால் பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு பணத்தை தர மறுக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், பணத்தை லலிதா பெயரில் வரைவோலையாக கொடுத்த பா.விஜய், லலிதா மீது புகார் அளித்துள்ளார்.