சீனாவின் யுன்னான் மாகாணம் பகுதியில், மலைப்பாதையில் பைக் ஓட்டிச் சென்ற பெண் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் பைக்குடன் பறந்து சென்று விழுந்தார். இந்த சம்பவம் பின்னால் வந்த காரின் டேஷ்கேம் கேமராவில் பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலானது. இந்நிலையில், அதிர்ஷ்டவசமாக, அவர் எந்த காயமும் இல்லாமல் உயிர்தப்பி நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.