கடலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். சிதம்பரம் அருகே செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில், லதா என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், அங்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில், அப்பெண் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து வருகின்றனர். இதற்கிடையே அங்கு சென்ற பரங்கிப்பேட்டை போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.