காரை பார்க்கிங் செய்யும் போது விபத்து - பெண் உயிரிழப்பு

சென்னை அடுத்த ஆவடியை சேர்ந்தவர் இந்துமதி. கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவரது கணவர் காரை வீட்டில் பார்க்கிங் செய்வதற்காக ரிவர்ஸ் எடுத்துள்ளார். அப்போது, கணவரின் கவனமின்மை காரணமாக கார் மோதியதில், காருக்கும் சுவருக்கும் இடையே சிக்கி இந்துமதி படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று (நவ.16) பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி