பீகாரில் தீவிர விரதம் இருந்த பெண் உயிரிழப்பு

பீகார் மாநிலம் திருவேணிகஞ்ச் பகுதியில் நவராத்திரி வழிபாட்டிற்காகத் தொடர்ந்து 9 நாட்கள் நெஞ்சின் மீது பச்சரிசி, பாக்கு, நாணயங்கள் வைக்கப்பட்ட மண் கலசத்தை வைத்து பெண் ஒருவர் தீவிர விரதம் இருந்துள்ளார். சடங்குகள் முடிந்த மறுநாளே அப்பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து 9 நாட்கள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி ஒரே இடத்தில் படுத்திருந்ததால் ஏற்பட்ட கடுமையான நீர்ச்சத்து குறைபாடு மற்றும் இதய பாதிப்பே அவரது மரணத்திற்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕