தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், அம்பர்பேட்டை அலி கஃபே சந்திப்பில் அதிவேகமாக வந்த ஆர்.டி.சி (RTC) பேருந்து மோதியதில், பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்த சிசிடிவி வெளியாகி வைரலான நிலையில், இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி: சோட்டா நியூஸ்