சென்னை மேடவாக்கத்தில் துணி காயப்போடும்போது ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவர் பலியானார். நன்மங்கலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிறுப்பில் துணி காயப்போடும்போது ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மஞ்சுளா (47) என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி உயிரிழந்தார். விஜி (45) என்பவர் ஹெல்மெட்டால் தலையில் அடித்ததாக கூறப்படும் நிலையில், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.