கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கணவர் மற்றும் குடும்பத்தினர் துன்புறுத்தியதால் விரக்தியடைந்த நவ்யா (28) என்ற பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நவ்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கணவர் சைலேஷ் மற்றும் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.