இங்கிலாந்தில் பெண் ஒருவர் கட்டிப்பிடிக்கவும், ஆறுதல்படுத்தவும் ஒரு மணிநேரத்திற்கு ரூ.7,400 கட்டணம் வாங்கி வருகிறார். இங்கிலாந்தின் மான்செஸ்டரைச் சேர்ந்த அனிகா ரோஸ் என்ற பெண் ஒரு அரவணைப்பு நிபுணர் ஆவார். தனிமையில் உழலும் பலர் ஆறுதலான அணைப்புக்கும், சிறிது நேரம் ஆறுதலுக்கும் இவரிடம் செல்கின்றனர். இவரின் கட்டிப்பிடி வைத்தியத்தால் மன அழுத்தம் குறைவதாகவும், மகிழ்ச்சி அதிகரிப்பதாகவும் வாடிக்கையாளர்கள் கூறி வருகின்றனர்.