கேரளம்: வயநாடு அருகே காப்பி பறிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பழங்குடியின பெண்ணான ராதா (48) என்பவர் அண்மையில் புலி தாக்கியதில் உயிரிழந்தார். அவரின் உடல் நேற்று (ஜன. 25) தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் புலியை பிடிக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனை தொடர்ந்து விரைவில் புலியை பிடிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பிடிக்க முடியாவிட்டால், சுட்டுக் கொல்லவும் ஆணையிடப்பட்டுள்ளது.