கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் மாங்காவு பகுதியில் அரசு விரைவு பேருந்தில் பெண் ஒருவர் பயணித்தார். தொடர்ந்து அந்த பெண், மாங்காவு அருகே உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு நிறுத்துமாறு நடத்துநரிடம் கூறினார். ஆனால், அங்கு பேருந்து நிறுத்தம் இல்லாததால் நிறுத்த மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் பேருந்து ஜன்னல் கண்ணாடியை உடைத்தார்.