கோவையில் பெண் அடித்துக்கொலை.. 10 நாட்களில் 3 பேர் பலி

கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டத்தைச் சேர்ந்த சாந்தி (58) என்பவர் தனது வீட்டில் படுகாயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். கடந்த 10 நாட்களில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர் கொலைகளால் கோவையில் அதிர்ச்சி நிலவுகிறது. கடந்த 3ஆம் தேதி நவீன், 6ஆம் தேதி அஸ்வின், 10ஆம் தேதி அமுதன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்குகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕