ரேஷன் கடைக்கு தீ வைத்து நாடகம்.. பெண் ஊழியர் கைது

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குறும்பட்டி நாச்சியூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் திடீரென தீப்பிடித்ததில் 20-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன. பட்டாசுகள் தீப்பிடித்ததால் விபத்து ஏற்பட்டதாக கடை விற்பனையாளர் ஹேமலதா தெரிவித்திருந்தார். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில், அரிசி மூட்டைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி அவரே தீ வைத்துவிட்டு, விபத்து போல் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து ஹேமலதாவை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕